
செய்திகள் மலேசியா
கெடாவில் உள்ள UUM வளாகத்திற்கான EMCO ஜூன் 26 வரை நீட்டிக்கப்படும்: இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர்:
கெடாவின் சிண்டோக்கில் உள்ள யுனிவர்சிட்டி உத்தாரா மலேசியா Universiti Utara Malaysia (UUM) வளாகத்திற்கான மேம்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவை இன்று மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். இது ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூன் 26 வரை நீடிக்கும் என்று அவர் அறிவித்தார்.
பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் உள்ள மாணவர்களிடையே அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 தொற்று எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்ட சுகாதார அமைச்சின் (MoH) ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
"ஒரு வாரத்தில், பல்கலைக்கழகத்தின் குடியிருப்பாளர்கள் மீது 208 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 18 பேர் தொற்றினால் பாதிப்படைந்துள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து அவை அதிகரித்து வருகின்றன என்று MoH கண்டறிந்தது," என்று அவர் தெரிவித்தார்.
"EMCO ஐ செயல்படுத்துவதும் வளாகத்திற்கு வெளியேயும் நோய்த்தொற்று பரவுவதை நிறுத்துவதோடு, பல்கலைக்கழகத்திற்கு வெளியே பரவாமல் இருப்பதை உறுதி செய்வதும் நம் முன் இருக்கும் மிகப்பெரும் சவால். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களை கண்காணிக்க MoH க்கு உதவுவதும் முக்கியமான ஒன்று ஆகும்," என்று அமைச்சர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm