நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது

பாச்சோக்: 

கிளாந்தான் மாநில மீன்வளத்துறை, பாச்சோக் பகுதியில் கடந்த பிப்ரவரி 13 முதல் 16 பேர் ஜெல்லி மீனால் தாக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளது.

பாச்சோக் மீன்வள மாவட்டத் தலைவர் அஹ்மத் ரஷீத் அஃபெண்டி அஹ்மத் ரஸாலி கூறியதாவது, பெரும்பாலான தாக்கங்கள் கடல்சார்ந்த செயற்பாடுகளின் போது ஏற்பட்டது. 

மருத்துவ உதவிக்காக அருகிலுள்ள கிளினிக்கில் அனுப்பப்பட்ட எல்லா பாதிக்கப்பட்டோரும் சிகிச்சை பெற்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் உடல் வலி, முகம் சிவத்தல், அரிப்பு போன்ற அறிகுறிகளை அனுபவித்துள்ளதாக, அஹ்மத் ரஷீத் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கடலில் இருந்து வெளியேறி, உடலை சுத்தமான நீரால் கழுவி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அபாயகரமான தாக்கங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் கடலில் விளையாடுவதை தவிர்க்கவும், ஜெல்லி மீன்களைத் தொடக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset