செய்திகள் மலேசியா
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
ஷா ஆலாம்:
புக்கிட் செந்தோசா, ஹுலு சிலாங்கூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட கலவரச் சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உதவுவதற்காக ஆறு ஆண்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் முகநூலில் வைரலான ஒரு வீடியோ பதிவைப் போலீஸார் கண்டறிந்ததாகச் சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு இரண்டு தனித்தனியான புகார்கள் பெறப்பட்டுள்ளன.
“ஆரம்பகட்ட விசாரணையில், இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான அதிருப்தி, கருத்து வேறுபாடுகளே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில், 18 முதல் 49 வயதுக்குட்பட்ட ஆறு உள்ளூர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கு குற்றவியல் பிரிவு 148 (கலவரம்) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக ஷாசெலி கூறினார்.
இந்தச் சம்பவம் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டால் ஏற்பட்டது என்றும், இதில் குண்டர்கும்பல் அல்லது இனவாதம் தொடர்பான எந்த அம்சமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“பொது மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக தாங்களே நடவடிக்கை எடுப்பதோ .அல்லது வதந்திகளையோ ஊகங்களையோ பரப்புவத்தைத் தவிர்க்க வேண்டும்.
பொது பாதுகாப்பு, அமைதியைப் பாதிக்கும் வகையில் செயல்படுவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
