செய்திகள் மலேசியா
உரிமம் இன்றி செயல்பட்ட தொழிற்சாலை மீது திடீர் சோதனை: 7 இலட்சத்திற்கும் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்
கோலா கங்சார்:
அனுமதியில்லாத மரப்பொருள் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட சோதனையில், ஏழு இலட்சம் ரிங்கிட்டிற்கு மேற்பட்ட மதிப்புள்ள இயந்திரங்களும், உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை நேற்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
பொதுச் செயல்பாட்டுப் படையின் தளபதி பல்வீர் சிங் மஹிந்தர் சிங் கூறுகையில், ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது, அந்த இடத்தின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படும் 43 வயதுடைய உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையில், 1987-ஆம் ஆண்டு பேராக் மாநிலதொழில் சட்டத்தின் கீழ் உரிமம் இல்லாமல், அந்த தொழிற்சாலை 2025 தொடக்கம் முதல் இயங்கி வந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், உரிமம் பெற இருமுறை எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தும், அதனை உரிமையாளர் பின்பற்றவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு, மேலதிக விசாரணைக்காக கோலா கங்சார் வனத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனுடன், வணிக உரிமம், விளம்பர பலகை இல்லாத குற்றச்சாட்டில் நகராட்சி நிர்வாகம் அபராதங்களையும் விதித்துள்ளது.
அனுமதியின்றி மரம் அடிப்படையிலான தொழில்களை நடத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
