நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி 

கோலாலம்பூர்: 

தரம் 15, அதற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் RM500 அளவிலான சிறப்பு நிதி உதவி (BKK) மார்ச் 13 அன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் ஹரிராயா பண்டிகைக்கான தயாரிப்புகளுக்கு உதவுவதற்காக வழங்கப்படுவதாகப் பொதுப்பணி துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த BKK உதவி அரசின் ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவத்தினர், ஓய்வூதியம் பெறாத முன்னாள் ராணுவத்தினருக்கும் RM250 வழங்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மேலும், வருமான வரி சட்டம் 1967-இன் துணைப் பிரிவு 127(3A)ன் கீழ், இந்த உதவி வருமான வரியிலிருந்து விலக்கு பெறும்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு நிதி உதவியைக் கடந்த அக்டோபர் 10 அன்று 2026 பட்ஜெட் உரையின்போது, பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset