செய்திகள் மலேசியா
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
கோலாலம்பூர்:
பள்ளி வளாகங்களில் அதிகபட்ச வேக வரம்பை 30 கிலோமீட்டராக நிர்ணயிக்க சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விதிகளில் திருத்தம் செய்ய போக்குவரத்து அமைச்சு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
மாணவர்கள், பள்ளி சமூகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் தேசிய கொள்கையாக, 2024 ஜூலை 15 அன்று அமைச்சரவையின் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் குழு இந்த முடிவை ஒப்புதல் அளித்தது.
இந்த திருத்தங்கள் பணிகள் அமைச்சு, பொதுப்பணித் துறை, உள்ளூராட்சி அமைச்சு, திட்டமிடல் துறை, கல்வி அமைச்சு, காவல்துறை, சாலை பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பல தரப்புகளுடன் இணைந்து விரிவாக பரிசீலிக்கப்படுகின்றன.
விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்ட பின், சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அமலாக்கம் ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடவடிக்கைகள், புதிய வேகக் குறியீட்டு பலகைகள், தெளிவான சாலை அடையாளங்கள், தானியங்கி கண்காணிப்பு கருவிகள், பள்ளி நேரங்களில் தொடர் கண்காணிப்பு மூலம் மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் உயிரிழப்புகள் குறையும் என அரசு நம்புகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:38 am
