செய்திகள் மலேசியா
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
கோலாலம்பூர்:
யயாசன் அகால்பூடி (Yayasan Akalbudi) நிதி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையான விடுதலை கோரி, துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான அஹ்மத் ஜாஹித் ஹமிடி இன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஆஜரானார்.
73 வயதான அவர், காலை 8.55 மணியளவில் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார். காலை 9 மணிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி நூருல்ஹுதா நுரைனி முஹமட் நோர் முன்னிலையில், அவரின் விடுதலை, தள்ளுபடி மனு தொடர்பான விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கில், அஹ்மத் ஜாஹித்தின் சார்பில் வழக்கறிஞர் டத்தோ ஹிஸ்யாம் தே போக் தேய்க் தனது வாதங்களை முன்வைக்க உள்ளார்.
கடந்த ஜனவரி 8 அன்று, 47 குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படாது என அறிவித்ததை அடிப்படையாக கொண்டு, ஜனவரி 28 அன்று அஹ்மத் ஜாஹித் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
