நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது 

ஹுலு கிள்ளான்: 

நடிகை அமிசா அஸ்னான் அவர்களின் மூத்த மகன் என்ட்ரி மிக்காயல் கைரில் இட்ஸார்  (23) அவர்களின் உடல், இன்று காலை 10.40 மணியளவில் இங்குள்ள உக்கே பெர்டானா இஸ்லாமிய கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நேற்று இரவு 10.15 மணியளவில் காலமானதாக அறிவிக்கப்பட்ட என்ட்ரி மிக்காயல் அமைதியான சூழலில், சுமார் 300 உறவினர்கள்,நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டார்.

நடிகை அமிசாவின் நண்பர்களான நடிகர், நடிகைகள் பலரும் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். 

மூன்று சகோதரர்களில் மூத்தவரான என்ட்ரி மிக்காயல் கடந்த ஒரு ஆண்டாக மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னதாக, மாற்று மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் உதவி கோரி, அமிசா பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், தனது Instagram பதிவுகள் மூலம், தமது மகன் குணமடைய பொதுமக்களின் பிரார்த்தனையும் உதவியையும் அவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், என்ட்ரி மிக்காயலுக்கு மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்ட செய்தியை அமிசா பகிர்ந்திருந்தார்.

அதற்கு ஒரு வருடம் கழித்து, அவரது இரண்டாவது மகன் அட்ரியன் அடாம் (18) எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டதால்,  அமிசா மீண்டும் கடுமையான சோதனைக்கு உள்ளானார்.  இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset