நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது

பெனம்பாங்: 

பெனம்பாங் காவல்துறையினர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 25.74 கிலோகிராம் மெத்தாம்ஃபெட்டமைன் போதைப் பொருளை, பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1.28 மில்லியன் ஆகும்.

பெனம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சமி நியூட்டன், கூறுகையில், நாற்பது வயதுடைய நால்வரை பரிசோதித்தபோது, 24 மெத்தாம்ஃபெட்டமைன் வகை போதைப்பொருள் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த வழக்கு 1952-ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மற்ற தொடர்புடைய நபர்களையும், போதைப்பொருள் விநியோகத்திற்கான வலைப்பின்னலையும் கண்டறிய விசாரணை தொடர்கிறது.

பொதுமக்கள் தொடர்ந்து மலேசிய போலீஸ் பிரிவு உடன் ஒத்துழைத்து, பெனம்பாங் மாவட்டத்தை போதைப்பொருள் அபாயத்திலிருந்து பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset