
செய்திகள் மலேசியா
ஜூன் 15 முதல் 28 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படும்
புத்ராஜெயா:
ஜூன் 15 முதல் 28 வரை நாடு தழுவிய பொது முடக்கம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று மாலை அறிவித்தார்.
சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையை முன்வைத்து, ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு (என்.எஸ்.சி) முன்மொழிந்தது என்றார் அமைச்சர்.
கோவிட் -19 தொற்று எண்ணிக்கை தினசரி 5, 000 க்கு மேல் அதிகரித்து வருவதாக அவர் கூறினார், வியாழக்கிழமை (ஜூன் 10) நிலவரப்படி சராசரியாக புதியவர்களாக அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6, 871 ஆக உள்ளது.
"எனவே, ஜூன் 15 முதல் 28 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்படும்" என்று அவர் வெளியிட்ட (ஜூன் 11) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்பு அறிவிக்கப்பட்ட உற்பத்தித் துறை வணிகங்கள், தொழில்களுக்கான நடமாட்ட இயக்க நடைமுறைகளின் (எஸ்ஓபி) பட்டியல் மாறாமல் அப்படியே உள்ளது என்றார்.
செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியல்கள் என்.எஸ்.சி வலைத்தளமான www.mkn.gov.my இல் காணக் கிடைக்கும்.
இவ்வாறு அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm