நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அக்டோபரில் ரூ.1.52 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

புது டெல்லி:

இந்தியாவில் அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.52 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூலானது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 16.6 சதவீதம் அதிக வரி வசூல் பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் சாதனை அளவாக ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த செப்டம்பரில் ரூ.1.48 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.

தொடர்ந்து 8 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதில் 2 மாதங்கள் (ஏப்ரல், அக்டோபர்) ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது.

மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.23,037 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, அக்டோபரில் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது.

தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.9,540 கோடியாகவும், புதுச்சேரியின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.204 கோடியாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset