நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு

கொழும்பு:

உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 

பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது.

கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தின வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும்.

பல இரத்தினங்கள் மற்றும் கொருண்டம் இனங்களின் படிகங்கள் பல்வேறு இரத்தினங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்படுகின்றன.

மேலும் இயற்கையாகவே இந்த அளவுள்ள கொருண்டம் படிகங்களின் கொத்துகள் வேறு எங்கும் பதிவாகியதில்லை. இது உலகின் அரிதான அருங்காட்சியக இரத்தினங்களில் ஒன்றாகும்.

- அஸ்லம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset