நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை

புது டெல்லி:

குழந்தைகளுக்கு வழங்கப்படும் செரலாக் உணவில் கூடுதலாக சர்க்கரை இடுபொருள் சேர்க்கப்படும் புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தை  இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சர்வதேச குழந்தைகள் உணவுப் பொருள் கண்காணிப்பு அமைப்பு IPFAN இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் செரலாக் உணவுப் பொருளுடன் ஒப்பிடும்போது, இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் செரலாக் உணவில் கூடுதல் சர்க்கரை இடுபொருள்கள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சை குறித்து வியாழக்கிழமை விளக்கமளித்த நெஸ்லே'இந்தியா நிறுவனம்,குழந்தைகள் உணவுப் பொருள்களில் எந்தவித சமரசமும் செய்துகொள்வதில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் வெவ்வேறு இடுபொருள்களின் அடிப்படையில், 30 சதவீதம் அளவுக்கு கூடுதல் சர்க்கரை அளவை நிறுவனம் குறைத்துள்ளது என்று தெரிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset