செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
கோலாலம்பூர்:
இன்று காலை 9 மணி நிலவரப்படி ஓர் அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.6815/6845- ஆக உள்ளது.
சமீபத்திய தரவுகள் அமெரிக்க தொழிலாளர் சந்தை பலவீனமாகவுள்ளதாக முவாமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் அஃஜானிசாம் அப்துல் ராஷிட் தெரிவித்தார்.
இதற்கிடையில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு 62.5 சதவீதமாக நிலையானது.
வேலையின்மை விகிதம் முந்தைய மூன்று மாதங்களில் 3.7 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாக உயர்ந்தது.
எனவே, அமெரிக்க தொழிலாளர் சந்தை மந்தமாக உள்ளது. மத்திய வங்கி இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நிதி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், முக்கிய நாணயங்களின் குழுவிற்கு எதிராக மலேசியா ரிங்கிட் குறைவாக வணிகம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் நாணயம் கடந்த வெள்ளியன்று 6.0050/0101 இலிருந்து பவுண்டுக்கு எதிராக 6.0190/0229 ஆக குறைந்தது.
ஜப்பானிய யெனுக்கு எதிராக கடந்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.1821/1850 இலிருந்து 3.1897/1919 ஆக சரிந்தது.
யூரோவிற்கு எதிராக மலேசிய நாணயம் 5.1281 இல் இருந்து 5.1281 ஆக குறைந்தது.
இந்திய நாணயப் பரிவர்த்தனையில் ஒரு மலேசிய ரிங்கிட், 17.66 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 12:21 pm
வணக்கம் இந்தியா நான்காம் கிளை உணவகம் ஜொகூர் தாமான் உங்கு துன் அமினாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2025, 8:30 pm
திமோர் லெஸ்தேவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சரின் மலேசிய வருகை முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும்
October 24, 2025, 3:53 pm
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
October 23, 2025, 5:29 pm
ரோபோக்கள் அல்ல இனி கோபோட்கள்: அமேசானில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
October 21, 2025, 10:24 pm
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
