நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு

கொழும்பு:

சர்வதேச மிளகு சமூகம் வருடாந்தம் நடத்தும் சர்வதேச மாநாட்டை 2024ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

1972 ஆம் ஆண்டில், உலகின் முக்கிய மிளகு உற்பத்தி செய்யும் நாடுகள் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக ஆணையத்தின் கீழ் சர்வதேச மிளகு சமூகத்தை நிறுவியது.

இந்த அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடுகள் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் ஆகியனவாகும்.

உறுப்பு நாடுகளுக்கு இடையே மிளகு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஆராய்ச்சி முடிவுகளை பரிமாற்றம், பாரம்பரிய, புதிய சந்தைகளுக்கான திட்டங்களை தயாரித்தல், ஊக்குவித்தல், சர்வதேச வர்த்தகத்தில் சுங்க வரி மற்றும் வரி அல்லாத தடைகளை தளர்த்துவதற்கான ஒத்துழைப்பை ஏற்படுத்துதல்.

மிளகு சமூகத்தின் 52 ஆவது சர்வதேச மாநாட்டை இந்த ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சரினால் முன்மொழியப்பட்டுள்ளது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset