
செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
கோலாலம்பூர்:
இன்று காலை 9.00 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.7205/7270-லிருந்து 4.7140/7225 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் மத்திய வங்கியின் தலையீடு அந்நாட்டின் People's Bank of China வங்கி சீன யுவானை வலுப்படுத்தும் நடவடிக்கையைக் காட்டுவதாக மூவாமாலாட் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்துள்ளார்.
எனவே, யுவானுடன் வலுவான நிலையானது மலேசியா ரிங்கிட்டின் மதிப்பு நிலையானதாக இருக்க உதவியதாகவும் அவர் கூறினார்.
சீனாவின் மத்திய வங்கி யுவானின் தினசரி நிர்ணயத்தை டாலருக்கு 7.0996 ஆக நிர்ணயித்துள்ளது.
உள்நாட்டில், மற்ற முக்கிய நாணயக் குழுக்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் பெரும்பாலும் குறைவாகவே வர்த்தகம் செய்யப்பட்டது.
உள்ளூர் நாணயம் யூரோவிற்கு எதிராக 5.1066/1137 இலிருந்து 5.1104/1197-க்கு சரிந்துள்ளது.
மேலும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.9549/9631 இலிருந்து 5.9590/9697-ஆக சரிந்துள்ளது.
இருப்பினும் ஜப்பானிய யென்க்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.21159/3.21150-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், மற்ற ஆசியான் நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் ஏற்றம் இறக்கமாக வர்த்தகம் செய்யப்பட்டது.
உள்ளூர் நாணயம் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.5060/5111 இல் இருந்து 3.5041/5106 இல் வர்த்தகம் செய்யப்பட்டது.
தாய் பாட்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 12.9627/9866 இலிருந்து 2.9751/13.0025-க்கு சரிந்தது.
அதுமட்டுமல்லாமல், மலேசிய ரிங்கிட் இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக 298.7/299.3 இலிருந்து 298.7/299.0 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
மலேசிய ரிங்கிட் பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக 8.37/8.40 ஆகவும் முன்பு 8.37/8.39 ஆக இருந்தது.
இதனிடையே, ஒரு மலேசிய ரிங்கிட் 17.65 இந்திய ரூபாய்க்கு வணிகம் செய்யப்படுகின்றது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm