செய்திகள் வணிகம்
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
கொழும்பு:
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை வாங்குவதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்து போட்டியிட்டுள்ளதாக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு நேற்று வெளிப்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவையான AirAsia, இலங்கையில் இயங்கும் Fitz Aviation ஆகியவை இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கு கோரப்பட்டுள்ள ஏலத்தில் விருப்பம் தெரிவித்த 6 முதலீட்டாளர்களின் விபரங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் இயங்கும் அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு நேற்று வெளியிட்டது.
ஸ்ரீலங்கன் விமான சேவையை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த தரப்பினர்:
1. AirAsia Consulting Sdn. Bhd.
2. Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd
3. FITS Aviation (Private) Limited
4. Sherisha Technologies Private Limited
5. Treasure Republic Guardians Limited
6. Hayleys PLC FITS Aviation இலங்கையில் சர்வதேச இடங்களுக்கு விமானங்களை இயக்கும் முதல் தனியார் விமான நிறுவனமாகும்.
குறைந்த கட்டண விமான சேவையாக செயல்படும் FITS ஏர்லைன்ஸ், தற்போது இந்த நாட்டிலிருந்து தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இடங்களுக்கு விமானங்களை இயக்குகிறது.
மேலும், Hayleys PLC என்பது இலங்கையில் பலதரப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஒரு பெரிய குழுமமாகும் மற்றும் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா அதன் கட்டுப்பாட்டு பங்குதாரராக உள்ளார்.
31 டிசம்பர் 2023 இல் ஹேலிஸ் பிஎல்சியின் பங்கு மூலதனத்தில் 51.01% திரு. தம்மிக்க பெரேராவுக்கு சொந்தமானது.
இது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளதாக அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 8, 2024, 10:05 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 5, 2024, 3:31 pm
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்
October 1, 2024, 11:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 30, 2024, 10:30 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 28, 2024, 4:25 pm
அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை
September 27, 2024, 10:33 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் வலுவடைந்தது
September 15, 2024, 5:15 pm