
செய்திகள் வணிகம்
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
கோலாலம்பூர்:
உணவகத் துறையில் தனி முத்திரை பதித்து வரும் இந்தியா கேட் நிர்வாகம் தமது 8ஆவது கிளையைச் செந்தூல் வட்டாரத்தில் திறக்கவுள்ளதாக இந்தியா கேட் குழுமத்தின் தலைவர் சரவணன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
சைபர்ஜெயா, பூச்சோங், சுபாங் ஜெயா, பங்சார், சிரம்பான், கிள்ளான், செமிஞ்சே ஆகிய பகுதிகளில் வாடிக்கையாளர்களின் மகத்தான ஆதரவைப் பெற்ற இந்தியா கேட்டின் புதிய கிளை Sentul Boulevard இல் மார்ச் 31ஆம் தேதி அதிகாரப்பூர்வாகத் திறப்பு விழா காண்கின்றது.
அன்றைய நாள் 1000 வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகப் பிரியாணி வழங்கப்படுமென்பதையும் சரவணன் உறுதிப்படுத்தினார்.
செந்தூல் வட்டாரத்தில் உள்ள மக்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிய கிளை உணவகத்தை அப்பகுதியில் திறப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா கேட் உணவக அடையாளத்தில் உச்சமாக இந்த செந்தூல் கிளை அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 140 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தக்கூடிய வசதிகளும் இந்த உணவகம் செயல்படவுள்ளது.
செந்தூல் மட்டுமின்றி. ஜாலான் ஈப்போ, செலாயாங், பத்துகேவ்ஸ், சிகாம்புட், கெப்போங் ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் இந்த இந்தியா கேட் உணவகம் அமைந்திருப்பதால், வாடிக்கையாளர்களைப் பெரும் அளவில் ஈர்க்குமென்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் சரவணன் கூறினார்.
இதனிடையே தனித்துவமான சுவை, மனம் கவரும் உபசரிப்பு, தரம் மாறாத உணவு என அனைத்து நிலைகளிலும் இந்தியா கேட் மக்கள் மத்தியில் மகத்தான ஆதரவைப் பெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு நம்பிக்கையின் உபசரிப்பில் சிறந்த முன்னுதாரண உணவகம் என்ற விருதையும் இந்தியா கேட் வென்றது குறிப்பிடத்தக்கது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm