நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஏர் ஆசியா எக்ஸ் குழும CEO: விலகுவதாக அறிவித்தார் டோனி ஃபெர்னாண்டஸ்

கோலாலம்பூர்:

ஏர் ஆசியா எக்ஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக டோனி ஃபெர்ணான்டஸ் அறிவித்துள்ளார்.

தமக்கு வேறு சில பொறுப்புகள் இருப்பதாகவும், அதன் காரணமாகவே இம்முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

AirAsia X Bhd (AAX) குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சில மாதங்களுக்கு முன்புதான் அவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளதாக புர்சா மலேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏர் ஆசியா இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், அந்நிறுவனத்தின் செயல் தலைவர் துங்கு மெஹ்மூத் ஃபவ்ஸி (executive chairman Tunku Mahmood Fawzy) உடனடியாக தாய் ஏர்ஆசியா எக்ஸ் Thai AirAsia X (Thai AAX) நிறுவனத்தின் சுயாதீன, நிர்வாக பொறுப்பற்ற செயல் இயக்குநராக  நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என்ற தமது பொறுப்பை, நிறைவேற்றி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் டோனி ஃபெர்னாண்டஸ்.

ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்துக்கு 13 விமானங்கள், தாய் ஏஏஎக்ஸ் நிறுவனத்துக்கு 7 விமானங்கள் என்ற இலக்கு தமக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா காலக்கட்டத்தின்போது கார்கோ வணிகம் மூலமாக ஏர் ஆசியா சுமார் 20 விழுக்காடு வருமானத்தை ஈட்டியதாகவும், இக் குழுமம் செலவினக் கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளது என்றும் டோனி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset