நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அதிக வெப்பம் காரணமாக இந்தியாவுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு

புது டெல்லி:

கடந்த ஆண்டு நிலவிய அதிக வெப்பம் காரணமாக வேளாண்மை, உற்பத்தி, சேவைகள் துறைகளில் இந்தியாவுக்கு சுமார் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு சார்பில் பருவநிலை வெளிப்படைத்தன்மை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக வெப்பம் நிலவியதன் காரணமாக, பல்வேறு துறைகளில் பணியாளர்களின் வேலைத்திறன் பாதிக்கப்பட்டு சுமார் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிடிபி மதிப்பில் 5.4 சதவீதம் ஆகும்.

More than 100 feared dead in India heat wave - Kuwait Times

கடந்த 2016 முதல் 2021 வரை இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் காரணமாக 3.6 கோடி ஹெக்டேருக்கு மேலான பரப்பளவில் நடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால், விவசாயிகளுக்கு சுமார் ரூ.30,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset