நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் சக்கரி

பாரிஸ்:

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக்குடன் மோதிய கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

ரோலண்ட் கேரோசில் நேற்று நடந்த கால் இறுதியில் போலந்தின் ஸ்வியாடெக்குடன் (20 வயது, 8வது ரேங்க்) மோதிய சக்கரி (25 வயது, 17வது ரேங்க்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப் போட்டி 1 மணி, 35 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் கிரீஸ் வீராங்கனை என்ற பெருமை சக்கரிக்கு கிடைத்துள்ளது. பிரெஞ்ச் ஓபனில் இதற்கு முன் அவர் 3ஆவது சுற்றை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்கிய ஸ்வியாடெக் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset