செய்திகள் விளையாட்டு
லி ஸீ ஜியா மீண்டும் வருவாரா?: சோங் வெய் அளித்த ஆச்சரியமான சமிக்ஞை
கோலாலம்பூர்:
மலேசிய பூப்பந்து சங்கத்தின் (BAM) செயல்திறன் குழுத் தலைவர் டத்துக் லீ சோங் வெய், நாட்டின் தொழில்முறை ஆடவர் ஒற்றையர் வீரர் லி ஸீ ஜியா மீண்டும் தேசிய அணியில் இணையக்கூடும் என்ற நம்பிக்கையூட்டும் சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவ்வீரருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.
தோமஸ் கோப்பை போட்டிக்காக தேசிய அணியுடன் சேர்வாரா அல்லது இல்லையா என்பது குறித்து ஸீ ஜியா விரைவில் முடிவை அறிவிப்பார் என சோங் வெய் தெரிவித்துள்ளார்.
கோ ஜின் வெய , தேசிய பயிற்சியாளர்கள் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பு நல்ல சூழலில் நடைபெற்றதாகவும், ஒரு வாரத்திற்குள் பதில் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
“இதுவரை அனைத்தும் நன்றாகவே நடந்து வருகிறது. நாங்கள் ஸீ ஜியா, ஜின் வெய் மற்றும் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினோம். அவர் ஒரு வாரத்தில் பதில் அளிப்பார். இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது, குறைந்தபட்சம் அவரது தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடிந்தது,” என்றார்.
மேலும், முன்னாள் உலகின் முதன்மை வீரரான சோங் வெய், ஸீ ஜியா இன்னும் முழுமையாக காயத்திலிருந்து மீளவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெர்மன் ஓபன் போட்டியிலிருந்து விலகியதாகவும் தெரிவித்தார்.
“அவர் 100 சதவீதம் குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஜெர்மன் ஓபனிலிருந்து விலகினார். ஸ்விட்சர்லாந்து ஓபனில் பங்கேற்று சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறோம்.
அதே நேரத்தில், 28 வயதான ஸீ ஜியா, தேசிய விளையாட்டு நிறுவனம் (ISN), தேசிய விளையாட்டு கவுன்சிலின் (MSN) ஆதரவைப் பெற வேண்டும் என்றும் சோங் வெய் நம்பிக்கை தெரிவித்தார்.
“அவர் மீண்டும் MSN-க்கு சென்று, அங்கிருந்து கிடைக்கும் உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் பரிந்துரைத்துள்ளேன். தனது தற்போதைய உடல்நிலை குறித்து இயக்குநர் அல்லது மருத்துவருடன் ஆலோசிக்கவும் முடியும்,” என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 11:39 am
கால்பந்தில் இனவெறிக்கு இடமில்லை: ரோஸ்னியரின் எச்சரிக்கை
February 19, 2026, 3:45 pm
ஸ்கீ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆசிய அளவில் முதலிடம்: மலேசியாவுக்கு பெருமை சேர்த்த அருவின்
February 19, 2026, 12:45 pm
மார்கோஸ்யின் ஹாட் கோல்: ஜேடிடி 16-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
February 16, 2026, 1:09 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 15, 2026, 11:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
February 15, 2026, 11:00 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி
February 14, 2026, 9:48 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: செல்சி வெற்றி
February 13, 2026, 10:02 am
