செய்திகள் விளையாட்டு
கால்பந்தில் இனவெறிக்கு இடமில்லை: ரோஸ்னியரின் எச்சரிக்கை
லண்டன்:
கால்பந்தில் இனவெறிக்கு எந்தச் சூழலிலும் இடமில்லை என பயிற்சியாளர் லியாம் ரோசெனியர் கடுமையாக எச்சரித்துள்ளார். வினீசியஸ் ஜூனியர் இனவெறி அவமதிப்புக்கு உள்ளானதாக கூறப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
போட்டியின் போது வினீசியஸ் மீது இனவெறி சொற்கள் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பு யுஇஎஃப்ஏ (UEFA) விசாரணை தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வினீசியஸ் தொடர்ந்து இத்தகைய அவமதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரோஸ்னியர் கூறுகையில், இனவெறி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்படும் எந்தப் பயிற்சியாளர், வீரர் அல்லது நிர்வாகியும் கால்பந்தில் தொடரக் கூடாது என்றார்.
இனவெறி உள்ளிட்ட பாகுபாடுகளை நிறுத்துவதற்கு சமூகமும் ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 5:36 pm
லி ஸீ ஜியா மீண்டும் வருவாரா?: சோங் வெய் அளித்த ஆச்சரியமான சமிக்ஞை
February 19, 2026, 3:45 pm
ஸ்கீ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆசிய அளவில் முதலிடம்: மலேசியாவுக்கு பெருமை சேர்த்த அருவின்
February 19, 2026, 12:45 pm
மார்கோஸ்யின் ஹாட் கோல்: ஜேடிடி 16-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
February 16, 2026, 1:09 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 15, 2026, 11:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
February 15, 2026, 11:00 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி
February 14, 2026, 9:48 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: செல்சி வெற்றி
February 13, 2026, 10:02 am
