செய்திகள் விளையாட்டு
இறுதிநேரத்தில் துல்லியமாக கோல் அடித்த பெஞ்சமின் செஸ்கோவை பாராட்டிய மைக்கேல் கேரிக்
லிவர்பூல்:
இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில், எவர்டன் அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளார், பெஞ்சமின் செஸ்கோ. அவரின் இந்த துல்லியமான முடிவுத்திறனை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் மைக்கேல் கேரிக் பெருமையாக பாராட்டியுள்ளார்.
தொடக்க அணியில் இடம் பெறாத போதிலும், மாற்று வீரராக களமிறங்கிய செஸ்கோ, கடைசி நான்கு போட்டிகளில் மூன்றில் முக்கிய கோல்களை பதிவு செய்துள்ளார்.
ஃபுல்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேர வெற்றி கோலும், வெஸ்ட் ஹாம் எதிரான ஆட்டத்தில் சமமான கோலை பெற்றுத் தந்ததும் அவரது பங்களிப்பில் அடங்கும்.
இந்தப் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய தாக்குதல் வீரர்கள் இணைந்து செயல்பட்டனர். மேத்தியஸ் குன்ஹா வழங்கிய பந்தை பிரையன் எம்பியூமோ, செஸ்கோவிடம் துல்லியமாக அனுப்ப, அவர் அதை கோலாக மாற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட், இங்கிலாந்து பிரீமியர் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்து, செல்சி, லிவர்பூல் அணிகளை விட மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 23, 2026, 11:32 am
உடல்நலக்குறைவிலும் டுப்லாண்டிஸ் தனது 37வது வெற்றி கிண்ணத்தை பதிவு
February 22, 2026, 11:40 am
இறுதி நேர கோலால் மலாக்கா அணியை வீழ்த்திய திரெங்கானு அணி
February 21, 2026, 7:30 pm
FAM-இல் பெரும் மாற்றம்: பழைய நிர்வாகிகளுக்கு விரைவில் விடை
February 21, 2026, 7:25 pm
காமன்வெல்த் விளையாட்டுகளில் மீண்டும் மின்னுவேன்: அமீனா உறுதி
February 21, 2026, 3:01 pm
MLS தொடக்கப் போட்டியில் மெஸ்ஸி – ஹியூங் மின் அணிகள் மோதல்
February 20, 2026, 5:36 pm
லி ஸீ ஜியா மீண்டும் வருவாரா?: சோங் வெய் அளித்த ஆச்சரியமான சமிக்ஞை
February 20, 2026, 11:39 am
கால்பந்தில் இனவெறிக்கு இடமில்லை: ரோஸ்னியரின் எச்சரிக்கை
February 19, 2026, 3:45 pm
