செய்திகள் விளையாட்டு
FAM-இல் பெரும் மாற்றம்: பழைய நிர்வாகிகளுக்கு விரைவில் விடை
கோலாலம்பூர்:
மலேசிய கால்பந்து சங்கம் (FAM) நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நிர்வாகக் குழுவில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் புதிய முகங்களாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், பெரிய அளவிலான மாற்றங்கள் திட்டமிடப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தேசிய கால்பந்து நிர்வாகத்தில் புதிய காலம் தொடங்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தற்போது FAM-இல் பழைய முகங்கள் இனி இருக்க வாய்ப்பில்லை. விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS) எடுக்கும் தீர்ப்புக்காகப் பலர் காத்திருக்கின்றனர். FAM மீது தடை அல்லது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் உள்ளது.
எனினும், புதிய தலைமையே FAM-ஐ வழிநடத்தும் என வதந்திகள் நிலவுகின்றன. அதனால், என்ன நடக்கிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்,” என அந்த மூலதாரம் தெரிவித்தது.
நேற்று BH ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட செய்தியில், FAM-இன் தேர்தல் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள தேர்வு விதிமுறைகளை மட்டும் பின்பற்றுவது போதாது என்றும் குறிப்பிடப்பட்டது.
இதே முகங்கள் தொடர்ந்து நிர்வாகத்தில் இருப்பதற்கான முக்கிய காரணம் இந்தத் தேர்வு முறைதான் என்றும், இதனால் இந்த ஆண்டு செப்டம்பரில் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் FAM-ஐ மாற்றியமைக்கும் முயற்சிகள் பாதிக்கப்படுகின்றன என்றும் விளையாட்டு, வணிக வழக்கறிஞர் நிக் எர்மான் நிக் ரோசெலி தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி, 2025–2029 காலகட்டத்துக்கான அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஒருமித்தமாகவும் விருப்பத்துடனும் தங்கள் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்தனர்.
ஏழு மரபுவழி (heritage) வீரர்களின் ஆவணங்கள் போலியாக்கப்பட்ட விவகாரம் காரணமாக, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) விதிக்கும் தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 21, 2026, 7:25 pm
காமன்வெல்த் விளையாட்டுகளில் மீண்டும் மின்னுவேன்: அமீனா உறுதி
February 21, 2026, 3:01 pm
MLS தொடக்கப் போட்டியில் மெஸ்ஸி – ஹியூங் மின் அணிகள் மோதல்
February 20, 2026, 5:36 pm
லி ஸீ ஜியா மீண்டும் வருவாரா?: சோங் வெய் அளித்த ஆச்சரியமான சமிக்ஞை
February 20, 2026, 11:39 am
கால்பந்தில் இனவெறிக்கு இடமில்லை: ரோஸ்னியரின் எச்சரிக்கை
February 19, 2026, 3:45 pm
ஸ்கீ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆசிய அளவில் முதலிடம்: மலேசியாவுக்கு பெருமை சேர்த்த அருவின்
February 19, 2026, 12:45 pm
மார்கோஸ்யின் ஹாட் கோல்: ஜேடிடி 16-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
February 16, 2026, 1:09 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 15, 2026, 11:01 am
