நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஸ்கீ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆசிய அளவில் முதலிடம்: மலேசியாவுக்கு பெருமை சேர்த்த அருவின்

கோலாலம்பூர்: 

மலேசியாவின் ஆல்பைன் ஸ்கீ வீராங்கனை அருவின் சலேஹுடின், மிலானோ கோர்டினா 2026 குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆசியாவின் சிறந்த வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

டோஃபேன் ஆல்பைன் ஸ்கீ மையத்தில் நடைபெற்ற போட்டியில், அருவின் 1 நிமிடம் 54.82 விநாடிகளில் போட்டியை முடித்து, 53 வீராங்கனைகளில் 44-ஆவது இடத்தைப் பெற்றார். இரு சுற்றுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்த வீராங்கனைகளில் அவர் இடம் பிடித்தார்.

22 வயதான அருவின், பிலிப்பைன்ஸ், தைவான், ஈரான் வீராங்கனைகளை முந்தி, ஆசிய அளவில் முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி மலேசிய விளையாட்டு வரலாற்றில் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset