நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

MLS தொடக்கப் போட்டியில் மெஸ்ஸி – ஹியூங் மின் அணிகள் மோதல்

லாஸ் ஏங்கலேஸ், அமெரிக்கா: 

மேஜர் லீக் சாக்கர் (Major League Soccer – MLS) தொடக்கப் போட்டியில், மெஸ்ஸி '(Lionel Messi') தலைமையிலான 'Inter Miami CF' அணியும், சன் ஹூங் மின் (Son Heung-min) முன்னிலையில் உள்ள 'Los Angeles FC' அணியும் நாளை மோதுகின்றன.

முன்பருவ காலத்தில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, இந்தப் போட்டியில் இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி, அதிக ரசிகர்கள் அமரக்கூடிய 'Los Angeles Memorial Coliseum' மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

MLS-இன் ‘கோல்டன் பூட்’ விருதை வென்றும், இருமுறை MVP விருதைப் பெற்றும் உள்ள மெஸ்ஸி, ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக புவேர்டோ ரிகோவில் நடைபெற இருந்த கடைசி நட்புப் போட்டி ஒத்திவைக்கப்பட்டபின், மீண்டும் மியாமி அணியுடன் பயிற்சியில் இணைந்தார்.

“நாங்கள் செல்ல முடியாதது வருத்தமாக இருக்கிறது,” என அணியின் பயிற்சியாளர் 'Javier Mascherano' கூறினார்.

“பல ஆண்டுகளாக செல்லாத நாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பையும், 'Independiente del Valle' போன்ற வலுவான அணிகளுக்கு எதிரான முக்கியமான தயாரிப்பையும் இழந்தோம்,” என்றார் அவர்.

‘தி ஹெரான்ஸ்’ (Inter Miami) அணி MLS Cup பட்டத்தை காக்கும் முயற்சியை தொடங்கும் நிலையில், புதிய முன்னணி வீரர் 'Germán Berterame' வேலை அனுமதி பெற்றதால் இப்போது விளையாடத் தகுதியடைந்துள்ளார்.

பெர்டெராமே இல்லையெனில், கடந்த ஆண்டு பிளேஆஃப்ஸில் பெரும்பாலும் மாற்று வீரராக விளையாடிய 39 வயதான Luis Suárez-ஐ முதல் அணியில் களமிறக்கலாம். அல்லது 4-3-3 அமைப்பில் மெஸ்ஸியை முன்னணியில் பயன்படுத்தலாம்.

மற்றொரு பக்கம், லேசான காயம் காரணமாக ஹியூங் மின், LAFC-இன் முன்பருவ நட்புப் போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும், கடந்த புதன்கிழமை நடைபெற்ற 'CONCACAF Champions Cup' முதல் சுற்றில் சிறப்பாக விளையாடி சந்தேகங்களை நீக்கினார். –ராய்ட்டர்ஸ்

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset