செய்திகள் விளையாட்டு
உடல்நலக்குறைவிலும் டுப்லாண்டிஸ் தனது 37வது வெற்றி கிண்ணத்தை பதிவு
பிரான்ஸ்:
நச்சுணவு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயரம் தாண்டும் போட்டியின் விளையாட்டு வீரர் அர்மண்ட் டுப்லாண்டிஸ் இன்று காலை நடைபெற்ற ஆல் ஸ்டார் பெர்ச் போட்டியில் பங்கேற்று 6.06 மீட்டர் உயரத்தை தாண்டி வெற்றி பெற்றார்.
இத்துடன், டுப்லாண்டிஸ் 2023 முதல் தொடர்ச்சியாக தனது 37வது வெற்றியை பதிவு செய்தார். ஆஸ்திரேலிய வீரர் குர்டிஸ் மார்ஷல் 6 மீட்டர் உயரத்தில் இரண்டாம் இடம், கிரேக் வீரர் எம்மானுயில் காராலிஸ் 5.90 மீட்டர் உயரத்தில் மூன்றாம் இடம் பெற்றனர்.
டுப்லாண்டிஸ் கூறுகையில், நான் உண்மையிலேயே தற்போது சீரான நிலையில் உள்ளேன். நச்சுணவினால் கடுமையாக உடல்நலம் பாத்திக்கபட்ட போதிலும், விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே சிந்தனையே இருந்தது. உலக சாதனையை மீட்டெடுக்க இயலாவிட்டாலும், இதுவும் எனக்கு சாதனையாகும்” என்று பெருமையாக தெரிவித்தார்.
டுப்லாண்டிஸ், தனது உலக சாதனையை மீட்டெடுக்க முயன்றாலும், 6.31 மீட்டர் உயரத்துக்கு அவரால் அதனை அடைய முடியவில்லை. ஆனாலும் எதிர்கால போட்டிகளின் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 22, 2026, 11:40 am
இறுதி நேர கோலால் மலாக்கா அணியை வீழ்த்திய திரெங்கானு அணி
February 21, 2026, 7:30 pm
FAM-இல் பெரும் மாற்றம்: பழைய நிர்வாகிகளுக்கு விரைவில் விடை
February 21, 2026, 7:25 pm
காமன்வெல்த் விளையாட்டுகளில் மீண்டும் மின்னுவேன்: அமீனா உறுதி
February 21, 2026, 3:01 pm
MLS தொடக்கப் போட்டியில் மெஸ்ஸி – ஹியூங் மின் அணிகள் மோதல்
February 20, 2026, 5:36 pm
லி ஸீ ஜியா மீண்டும் வருவாரா?: சோங் வெய் அளித்த ஆச்சரியமான சமிக்ஞை
February 20, 2026, 11:39 am
கால்பந்தில் இனவெறிக்கு இடமில்லை: ரோஸ்னியரின் எச்சரிக்கை
February 19, 2026, 3:45 pm
ஸ்கீ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆசிய அளவில் முதலிடம்: மலேசியாவுக்கு பெருமை சேர்த்த அருவின்
February 19, 2026, 12:45 pm
