நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

காமன்வெல்த் விளையாட்டுகளில் மீண்டும் மின்னுவேன்: அமீனா உறுதி

கோலாலம்பூர்: 

சமீபத்தில் நடைபெற்ற 7 நாடுகள் கலந்து கொண்ட பவுலிங் (Boling) சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றது, அலீனா அஹ்மத் நவாவிக்குத் தனது பயணத்தின் முடிவாக அல்ல; மாறாக, காமன்வெல்த் விளையாட்டுகளில் மேலும் பெரிய வெற்றிகளை அடைய தூண்டுகோலாக அமைந்துள்ளது.

தனது இந்தச் சாதனை தனிப்பட்ட இலக்குகளை
நிறைவேற்றும் வழி என அலீனா தெரிவித்தார். ஆரம்பத்திலேயே தங்கப் பதக்கம் தான் தனது இலக்கு என்றும் அவர் கூறினார்.

 2023-ஆம் ஆண்டு தனது ஜோடி நூர் ஐன் நபிலா தார்மிசியுடன் உலக சாம்பியன்ஷிப் வென்ற அலீனா, இந்த முறை பந்தின் வேகம், கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுடன் ஒப்பிடும்போது, இப்போது தனது பந்துவீச்சு கட்டுப்பாடு மிகவும் மேம்பட்டுள்ளதாகவும், இது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காமன்வெல்த் விளையாட்டுகளை முன்னிட்டு, பந்துவீச்சில் தொடர்ச்சியான முன்னேற்றமே தனது முதன்மை கவனம் என அலீனா வலியுறுத்தினார். அதுவே தனக்கு மன உறுதியை அளிக்கும் என அவர் நம்புகிறார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset