நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இறுதி நேர கோலால் மலாக்கா அணியை வீழ்த்திய திரெங்கானு அணி

மலாக்கா:

சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் திரெங்கானு அணி, மலாக்கா அணியை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்தப் போட்டி ஹாங் ஜெபாட் அரங்கத்தில் நடைபெற்றது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே திரெங்கானு அணியே அதிக ஆதிக்கம் செலுத்தியது. ஏழாம் நிமிடத்தில் கெர்வேன் கஸ்டனீரை எடுத்த முயற்சியை மலாக்கா அணியின் கோல் காப்பாளர் சாமுவேல் சோமர்வில்லே தடுத்து நிறுத்தினார். 

தொடர்ச்சியான தாக்குதல்களின் பலனாக முப்பத்தைந்தாம் நிமிடத்தில் அக்யார் ரஷீத் முதல் கோலை பதிவு செய்தார். முதல் பாதி முடிவில் திரெங்கானு முன்னிலை பெற்றது.

இரண்டாம் சுற்று ஆட்டத்தில் மலாக்கா அணியின் வீரரான மஹல்லி ஜசுலி களமிறங்கினார். எழுபத்தி மூன்றாம் நிமிடத்தில் அவரது முயற்சிக்குப் பின்னர் டினோ காலேசிக் வெளிப்புறத்திலிருந்து எடுத்த அருமையான ஷாட்டால் மலாக்கா சமநிலை பெற்றது.

ஆனால் மூன்று நிமிடங்களுக்குள் பாகியுதீன் ஹாடான கோலை அடித்து திரெங்கானுவுக்கு வெற்றி பெற்றுத் தந்தார். இறுதியில் மலாக்கா அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset