செய்திகள் மலேசியா
லாபுவானை திணறடிக்கும் கொரோனாவின் டெல்டா திரிபு
விக்டோரியா:
லாபுவானில் கிருமித்தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக அதன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தற்போது அங்கு உருமாறிய கொரோனாவின் டெல்டா திரிபு வேகமாகப் பரவி வருவதாக லாபுவான் சுகாதார இயக்குநர் கூறியுள்ளார்.
அண்மைய சில தினங்களாக லாபுவானில் தினந்தோறும் 3 இலக்கங்களில் கிருமித்தொற்று பதிவாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை 191 பேருக்கு புதிதாக கிருமி தொற்றிய நிலையில் 7 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இன்று மேலும் 200 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5352ஆக அதிகரித்துள்ளது.
முன்பு நாள்தோறும் 800 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அத்தியாவசியச் சேவை அளிக்கும் துறைகளைச் சார்ந்த சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்டா கொரோனா திரிபு சமூக அளவில் பரவியுள்ளதால் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. மேலும் கொரோனாவின் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் கடுமையாக உள்ளன. பெருநாள் கொண்டாட்டத்தின்போது மக்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததும் தொற்றுப் பரவல் அதிகரிக்க ஒரு காரணமாகி விட்டது," என்று லாபுவான் சுகாதார இயக்குநர் Dr Ismuni Bohari தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
November 29, 2024, 6:15 pm
கிளந்தானில் மோசமான வெள்ளம்: 20 கூட்டரசு சாலைகள் மூடப்பட்டது
November 29, 2024, 6:04 pm
நாளை வரை நாட்டிலுள்ள எட்டு மாநிலங்களில் கனமழை தொடரும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
November 29, 2024, 6:03 pm
நாட்டில் மோசமடையும் வெள்ளம்: இதுவரை 3 பேர் பலி; 95 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்
November 29, 2024, 5:33 pm
நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஜொகூர் மாநிலத்தில் கடுமையான வெள்ளம்
November 29, 2024, 5:32 pm
நாசி லெமாக் உணவு 2 ரிங்கிட்டாக விலையுயர்வு காண்கிறது
November 29, 2024, 5:08 pm