
செய்திகள் மலேசியா
புதிய உச்சம்: மலேசியாவில் ஒரே நாளில் 150,309 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
கோலாலம்பூர்:
மலேசியாவில் நேற்று ஒரே நாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து இருநூறாயிரம் ஊசிகளைப் போடுவது என்ற இலக்கை எட்டிப் பிடிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நேற்றைய தினம் 151,309 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும், அவற்றுள் 105,722 முதல் தவணையாக போடப்பட்டன என்றும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார். 45,587 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
"ஜூன் 8ஆம் தேதி 150,309 ஊசிகள் போடப்பட்டுள்ளன. இனி இந்த எண்ணிக்கையை சீராக அதிகரித்து அன்றாடம் இருநூறாயிரம் ஊசிகளை எட்டிப்பிடிப்பதுதான் முக்கிய இலக்கு," என்றார் கைரி ஜமாலுதின்.
போதுமான அளவு தடுப்பூசிகள் வரத்தொடங்கியதும் நாட்டில் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 150,000ஆக அதிகரிக்கப்படும் என்று கடந்த மாதம் அவர் தெரிவித்திருந்தார்.
"சுகாதார அமைச்சு மேலும் 12.4 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. எனவே ஒட்டுமொத்தத்தில் 44.8 மில்லியன் தடுப்பூசிகள் மலேசியா கைவசம் இருக்கும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினருக்கு தடுப்பூசிகளைப் போட முடியும்," என்றார் அமைச்சர் கைரி.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm