
செய்திகள் மலேசியா
வியாழக்கிழமை மாமன்னரை சந்திக்கும் துன் மகாதீர்
புத்ராஜெயா:
எதிர்வரும் வியாழக்கிழமை அன்று மாமன்னரை, பெஜுவாங் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான துன் மகாதீர் சந்திக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மாமன்னரிடமிருந்து உரிய அழைப்பு வந்திருப்பதாக பெஜுவான் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் உல்யா அகாமா ஹஸாமுதீன் (Ulya Aqamah Husamudin) தெரிவித்ததாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இந்த அதிகாரப்பூர்வ கடிதம் அரண்மனையிடமிருந்து கடந்த வாரமே கிடைக்கப் பெற்றது என்றும், எத்தனை மணிக்கு சந்திப்பு நிகழும் என்பது இன்னும் தெரியவில்லை என்றும் Ulya Aqamah Husamudin குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரநிலைப் பிரகடனம் ஆகஸ்டு 1ஆம் தேதி முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் மாமன்னர் சந்தித்துப் பேச இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
எனினும் பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் அரண்மனையிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மாமன்னரைச் சந்திக்க நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான துன் மகாதீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அம்னோவுக்கு இதுபோன்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என அக் கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹஸன் Mohamad Hasan தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm