நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய சமையல் எண்ணெய் விலைகள்: அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர்:

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் சமையல் எண்ணெய்க்கான புதிய சில்லறை விலையை அக்டோபர் 8 முதல் நவம்பர் 7 வரை அமலுக்கு கொண்டு வரவுள்ளது என்று அறிவித்துள்ளது.

1 கிலோ பாட்டிலின் சில்லறை விலை RM7.10 ஆகவும், 2 கிலோ பாட்டில் RM13.50 ஆகவும், 3kg கிலோ பாட்டில் RM19.90ஆகவும்  5kg பாட்டில் எண்ணெய் RM31.50 ஆகவும் இருக்கும் என்று 
அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறியுள்ளார்.  

அரசு நிர்ணயித்த விலையை மதிக்காமல் எவராவது அதிக விலைக்கு விற்றால் ஒரு தனிநபருக்கு RM100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.

அந்தத் தவறை ஏதேனும் வர்த்தக  நிறுவனம் செய்தால் அந்த நிறுவனத்துக்கு RM500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset