செய்திகள் மலேசியா
டிசம்பர் 21 முதல் தினசரி சென்னை - பினாங்கு இடையே விமான சேவையை அறிமுகப்படுத்தும் இண்டிகோ
கோலாலம்பூர்:
சென்னைக்கும், பினாங்கு நகருக்கும் இடையே நேரடி விமான சேவையை டிசம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்கும் என்று இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தெரிவித்துள்ளது.
கோவிட்-19 காலக்கட்டத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால் பல விமான நிறுவனங்கள் பல புதிய நகரங்களுக்கு தங்கள் சேவையைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சென்னைக்கும், மலேசியாவில் உள்ள பினாங் நகருக்கும் இடையே நேரடி விமான சேவையை டிசம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்கும் என்று இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மலேசியாவின் இரு நகரங்களுக்கு நேரடி விமான சேவை உள்ள நிலையில் மூன்றாவது நகரமாக பினாங்கை இணைத்துள்ளது இண்டிகோ.
இந்த நேரடி விமானங்கள் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வர்த்தக உறவுகளையும் மேம்படுத்தும் என்று விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் ஏற்கனவே தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் கோலாலம்பூர், லங்காவி நகரங்கள் மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 1:05 pm
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்துறை அமைச்சகம் மதித்து ஏற்கின்றது: சைஃபுடின் நசுத்தியோன்
November 25, 2024, 1:04 pm
நான்கு நாடுகளுக்கான பயணத்திற்கு தனியார் நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்படவில்லை: பிரதமர்
November 25, 2024, 1:02 pm
போதுமான விளம்பரங்கள் இல்லாததே மலேசியாவுக்கான சுற்றுப் பயணிகள் குறைவிற்கு முக்கிய காரணம்: மஸ்லி மாலிக்
November 25, 2024, 1:01 pm
பினாங்கில் நடந்த கைகலப்பு சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது: போலிஸ்
November 25, 2024, 12:40 pm
எஸ்பிஎம் தேர்வு டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நடைபெறும்: கல்வி அமைச்சகம் தகவல்
November 25, 2024, 11:57 am
ஸ்வாட்ச் கைக்கடிகாரங்களைத் திரும்ப ஒப்படைக்க உள்துறை அமைச்சகத்திற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு
November 25, 2024, 10:34 am
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹோ சி மின் நகருக்குத் திருப்பியது
November 25, 2024, 10:34 am