செய்திகள் மலேசியா
கூட்டரசுப் பிரதேசத்தில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி குறிவைக்கிறது: ஜாஹித்
கோலாலம்பூர்:
கூட்டரசுப் பிரதேசத்தில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி குறிவைத்துள்ளது.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள கூட்டணிகள் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளன.
இதன் அடிப்படையில் கூட்டரசுப் பிரதேசத்தில் 5 தொகுதிகளில் தேசிய முன்னணி போட்டியிடவுள்ளது.
டத்தோஶ்ரீ ஜொஹாரி அப்துல் கனி வெற்றி பெற்ற தித்திவங்சா, புத்ராஜெயா, லாபுவான் ஆகிய தொகுதிகளும் அதில் அடங்கும்.
இத்தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். இதில் 5 தொகுதிகள் தேசிய முன்னணிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
கூட்டரசுப் பிரதேச தேசிய முன்னணி கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 1:05 pm
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்துறை அமைச்சகம் மதித்து ஏற்கின்றது: சைஃபுடின் நசுத்தியோன்
November 25, 2024, 1:04 pm
நான்கு நாடுகளுக்கான பயணத்திற்கு தனியார் நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்படவில்லை: பிரதமர்
November 25, 2024, 1:02 pm
போதுமான விளம்பரங்கள் இல்லாததே மலேசியாவுக்கான சுற்றுப் பயணிகள் குறைவிற்கு முக்கிய காரணம்: மஸ்லி மாலிக்
November 25, 2024, 1:01 pm
பினாங்கில் நடந்த கைகலப்பு சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது: போலிஸ்
November 25, 2024, 12:40 pm
எஸ்பிஎம் தேர்வு டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நடைபெறும்: கல்வி அமைச்சகம் தகவல்
November 25, 2024, 11:57 am
ஸ்வாட்ச் கைக்கடிகாரங்களைத் திரும்ப ஒப்படைக்க உள்துறை அமைச்சகத்திற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு
November 25, 2024, 10:36 am
டிசம்பர் 21 முதல் தினசரி சென்னை - பினாங்கு இடையே விமான சேவையை அறிமுகப்படுத்தும் இண்டிகோ
November 25, 2024, 10:34 am