நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு பேரா சுல்தான் தலைமையேற்றார்

ஈப்போ:

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் தலைவராக கொண்டு நடத்தப்பட்ட தீபாவளி விருந்து உபசரிப்பில் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுதின் ஷா, அரசியார் துவாங்கு ஜாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராஜா மூட பேராக் ராஜா ஜாபர் ராஜா மூடா, ராஜா டிஹிலிர் பேராக் ராஜா இஸ்கந்தர் துர்கர்னைன், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகரகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈப்போவில் உள்ள இந்திரா மூலியா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய டத்தோஸ்ரீ சராணி முகமட் நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமையை கண்டு உலக நாடுகள் பொறாமை கொள்ளும் அளவில் மலேசியர்களின் சமூக புரிந்து ணர்வு வாழ்ந்து வருகிறார்கள்

சமூக ஓற் றுமையின் கட்டமைப்பு தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்று உரையில் குறிப்பிட்டார்

விருத்து உபசரிப்பு மற்றும கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலத்துக் கொண்டனர்.

நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன்,

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் உணவுகளில் இனிப்பு குறைக்கப்பட்ட உணவிகள் வழங்கப்பட்டது.

இனிப்பு குளிர் பானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது அதற்கு பதில் miinaral water, சீனி குறைந்த தேநீர் காப்பி வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆண்டாக பிரகடனம் படுத்தப்பட்டுள்ளதால் அரசாங்கம் நடத்தும் நிகழ்வுகளில் நிரிழிவு நோயை கட்டுபடுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இனிப்பு வகை உணவுகளில் இனிப்பை குறைக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset