நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்வாட்ச் கைக்கடிகாரங்களைத் திரும்ப ஒப்படைக்க உள்துறை அமைச்சகத்திற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு 

கோலாலம்பூர்:

கடந்தாண்டு உள்துறை அமைச்சகம் பறிமுதல் செய்த 172 ஸ்வாட்ச் கைக்கடிகாரங்களை மீண்டும் ஒப்படைக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் 14 நாட்களுக்குள் அனைத்துக் கைக்கடிகாரங்களையும் திருப்பித் தருமாறு உள்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி டத்தோ அமர்ஜித் சிங் உத்தரவிட்டார்.

உள்துறை அமைச்சகம் கைக்கடிகாரங்களைக் கைப்பற்றியது சட்டத்திற்கு முரணாக செயல்பட்டது என்றார் அவர்.

ஸ்வாட்சின் வானவில் கருப்பொருளான “ப்ரைட் கலெக்ஷன்” உள்ளிட்ட கைக்கடிகாரங்கள் கடந்த ஆண்டு மே 13 முதல் 15 வரை உள்துறை அமைச்சக அமலாக்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

Pavilion KL, 1 Utama, Sunway Pyramid, Mid Valley Megamall, Suria Sabah ஆகிய இடங்களிலுள்ள 11 ஸ்வாட்ச் கடைகளில் இருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதே மாதம் உயர் நீதிமன்றம் ஸ்வாட்ச் மலேசியாவிற்கு அதன் "பிரைட் கலெக்ஷன்" தொடரின் கைக்கடிகாரங்கள் உட்பட, கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி வழங்கியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset