நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரயில் விபத்து: முழு அறிக்கை அமைச்சரவையில் நாளை தாக்கல்

புத்ராஜெயா:

இரு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை நாளை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கை தற்போது போக்குவரத்து அமைச்சிடம் அளிக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விபத்து தொடர்பான அறிக்கையானது இணையம் வழி நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது விசாரணை கமிட்டியால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையில் எல்.ஆர்.டி. சேவை மேலும் மேம்படுத்தப்படும் என்றும், விசாரணைக் குழுவின் இடையறாத முயற்சிகளுக்குத் தாம் நன்றி தெரிவித்ததாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக் கமிட்டி கண்டறிந்த விவரங்கள், செய்துள்ள பரிந்துரைகள் ஆகியவை ரயில்களை இயக்குவதற்கான SOPகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் உள்ள இடைவெளிகளைக் களைய உதவும்.

ஒன்பது பேர் கொண்ட கமிட்டி அளித்துள்ள அறிக்கையின் தாம் முழுமையாக ஆய்வு செய்யப் போவதாகக் குறிப்பிட்ட அவர், 14 நாட்களுக்குள் இந்த அறிக்கை தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மலேசியாவின் ஒட்டுமொத்த ரயில் சேவையின் கட்டமைப்பை மேம்படுத்த அறிக்கையில் உள்ள அம்சங்களும் விசாரணைக் குழுவினர் கண்டறிந்தவையும் உதவிகரமாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

கடந்த திங்கள்கிழமை மாலை  இரண்டு எல்.ஆர்.டி.  ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பல பயணிகள் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset