நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைனின் இரு பகுதிகளை இணைத்துக் கொள்ள ரஷியாவுக்கு அழைப்பு

கீவ்:

உக்ரைனின் லுஹான்ஸ்க், கெர்சான் பகுதிகளை இணைத்துக் கொள்ளுமாறு அந்தப் பிராந்தியங்களின் தலைவர்கள் அதிபர் விளாதிமீர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட  பொதுவாக்கெடுப்பில் ரஷியாவுடன் இணைய பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து லுஹான்ஸ்க் பிராந்திய நிர்வாகத் தலைவர் லியோனிட் பசேஷ்னிக் வெளியிட்டுள்ள பதவில்,

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ரஷியாவுடன் இணைய பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  

எனவே, இந்தப் பிராந்தியத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

உக்ரைன் ராணுவத்தினரால் லுஹான்ஸ்க் பிராந்திய மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை அதிபர் புதின் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset