நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது

சிங்கப்பூர்:

முன்னாள் வழக்கறிஞர் M ரவியுடன் போதைப்பொருள்களை உட்கொண்டதாகக் கூறப்படும் நபரை மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திரு ரவி இறப்பதற்குச் சில மணி நேரம் முன்னர் இருவரும் சேர்ந்து போதைப்பொருள்களை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதிகாலை 5.40 மணிக்கு நினைவின்றிக் கிடந்த ரவியைப் பற்றி சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் அங்கு சென்றபோது ரவி நினைவின்றிக் கிடந்தார். அவருடன் மற்றொரு நபரும் இருந்தார்.

அவரை "A" என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

"A" ரவியுடன் சில மணி நேரத்துக்கு முன் போதைப் பொருள் உட்கொண்டதாகக் கூறினார்.

திடீரென்று வழக்கறிஞர் ரவி மயக்கமடைந்ததாகவும் அவருக்குத் தாம் அவசர உதவி சிகிச்சை அளித்ததாகவும் "A" கூறினார்.

"A" பின்னர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைத்திருக்கிறார்.

போதைப்பொருள் தம்முடையது என்றும் அவர் சொன்னார்.

ரவி காலை 6.50 மணியளவில் டான் டொக் செங் மருத்துவமனையில் மாண்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset