நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் 

சிங்கப்பூர்: 

கிறிஸ்துமஸுக்கு முன்தினம் சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூட்ட நெரிசலைச் சமாளிக்கக் கூடுதல் கட்டுப்பாடுகளும் சுற்றுக்காவலும் நடப்பில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகளும் வழிக்காட்டும் பதாகைகளும் பொருத்தப்படும்.

ஆர்ச்சர்ட் MRT நிலையத்தின் சில நுழைவாயில்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் பைகளையும் உடைமகளையும் சோதனை செய்வர்.
அதற்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பொதுமக்கள் சோமர்செட் (Somerset) MRT நிலையத்தையோ அல்லது மாற்று வழிகளையோ பயன்படுத்திப் பயணம் செய்யும்படி காவல்துறை அறிவுறுத்தியது.

Year-end Orchard Road busking curbs: Crowd control measures necessary to  ensure safety, say police | The Straits Timesபுதன்கிழமை காலை 6 மணி முதல் வியாழக்கிழமை பின்னிரவு 2 மணி வரை பின்வரும் சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும்:

ஸ்கோட்ஸ் ரோட்டுக்கும் (Scotts Road) பிட்ஃபோர்ட் ரோட்டுக்கும் (Bideford Road) இடைப்பட்ட சாலைப்பகுதி

ஸ்கோட்ஸ் ரோட்டிலிருந்து ஆர்ச்சர்ட் ரோட்டுக்கு இட்டுச் செல்லும் சாலை

ஆர்ச்சர்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் மவுண்ட் எலிசபத் (Mount Elizabeth) சாலை

வாகனமோட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விழாக்காலங்களின்போதும் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் காவல்துறை வலியுறுத்தி உள்ளது.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset