நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி  

தைபே:

தைவான் தலைநகர் தைப்பேயின் சுரங்க ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் சந்தேக நபர் உட்பட 4 பேர் மாண்டனர்.

5 பேர் காயமுற்றிருக்கின்றனர் என்றும் தைவானியப் பிரதமர் சோ ஜுங் டாய் தெரிவித்தார்.

சந்தேக நபர் ஒரு ரயில் நிலையத்தில் பெட்ரோல் குண்டுகளையும் புகைக் குண்டுகளையும் வீசியதாகத் தெரிகிறது.

பின்னர் மற்றொரு ரயில் நிலையத்தில் கத்தியைக்கொண்டு வழிப்போக்கர்களைத் தாக்கியதாகச் சொல்லப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது அவர் கட்டடத்திலிருந்து விழுந்து மாண்டதாக சோ கூறினார்.

அவருக்குக் குற்றப் பின்னணி இருப்பது கண்டறியப்பட்டது. காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

தைப்பே ரயில் நிலையங்களிலும் சுற்றுவட்டாரங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருப்பதாகத் தைவானியப் பிரதமர் கூறினார்.

தைவானிய அதிபர் லாய் சிங் டீ (Lai Ching-te) விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset