நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் போண்டி (Bondi) கடற்கரை தாக்குதலைத் தடுக்க முயன்ற ஆடவருக்கு 2.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கொடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்தபோது 43 வயது அஹ்மது அல்-அஹ்மது துப்பாக்கிக்காரரைத் தடுத்து பல பேரின் உயிர்களைக் காப்பாற்றினார்.

அஹ்மது மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்காக நிதி திரட்டப்பட்டது.

உலகின் பல நாடுகளிலிருந்து 43,000க்கும் அதிகமானோர் அவரது தீரச் செயலுக்காக பணம் கொடுத்தனர்.

அவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் பில் எக்மனும் (Bill Ackman) ஒருவர்.

இணையப் பிரபலம் செக்கரி டெரெனியோவ்ஸ்கி (Zachery Dereniowski) அஹ்மதைச் சந்தித்துக் காசோலையைத் தந்தார்.

அப்போது அஹ்மது "நான் இதற்குத் தகுதியானவனா?" என்று கேட்டார்.

"ஒவ்வொரு டாலரும் உங்களுக்கே உரியது" என்று டெரெனியோவ்ஸ்கி பதில் சொன்னார்.

பணம் கொடுத்தவர்களிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அஹ்மதுவிடம் கேட்கப்பட்டது.

அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுக்கவேண்டும்.

உயிர்களைக் காப்பாற்ற தயங்காமல் முன்வரவேண்டும் என்றார் அஹ்மது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset