செய்திகள் உலகம்
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன்:
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைகழகத்திலும், எம்ஐடியிலும் நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களை தொடர்ந்து கிரீன் கார்டு திட்டத்தை உடனடியாக நிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைகழக வளாகத்தில் சமீபத்தில் ஒருவர் துப்பாக்கிசூடு நடத்தினார். இதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
அதே போல் எம்ஐடி கல்வி நிறுவன பேராசிரியராக இருந்த நூனோ கோம்ஸ் லூரைரோ என்பவரை அவரது வீட்டுக்கு அருகில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
இந்த துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவர் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் பிரவுன் பல்கலைகழக துப்பாக்கிடு சம்பவத்தில் ஈடுபட்டவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த நெவேஸ் வாலன்டே என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் பிரவுன் பல்கலைகழகத்தில் பயின்றவர். மேலும் நூனோ கோம்ஸ் லூரைரோ உடன் போர்த்துக்கீசிய பல்கலைகழகத்தில் ஒன்றாக படித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நெவேஸ் வாலன்டேயின் கடந்த 2017ம் ஆண்டு கிரீன் கார்டு குலுக்கல் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர் என்பது கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து, கிரீன் கார்டு திட்டத்தை உடனடியாக நிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 19, 2025, 9:54 pm
ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 14, 2025, 6:33 pm
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
December 13, 2025, 10:57 am
