நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு பெத்லஹம் நகரில் மீண்டும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியது

பெத்லஹாம்:

மேற்குக்கரை நகரான பெத்லஹமில் மீண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

கடந்த ஈராண்டுகளாக காஸா மக்களிடம் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த பெத்லஹம் நகர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தவிர்த்து வந்தது.

தற்போது சண்டைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு கொண்டாட்டங்கள்  மீண்டும் தொடங்கியுள்ளன.

பெத்லஹம் நகரம் கிறிஸ்துவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம். 

அது இயேசு கிறிஸ்து பிறந்த இடம் என்பது அவர்களின் நம்பிக்கை.

இந்த வருடம் மீண்டும் திரும்பியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பெத்லஹம் மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
 
ஈராண்டுப் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்தது.

மனிதாபிமானமற்ற இஸ்ரேல் புரிந்த போர் பெத்லஹம் நகரின் பொருளாதாரத்தையும் பாதித்தது. 

கிட்டத்தட்ட 85 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் வருமானத்திற்குச் சுற்றுலாவைத்தான் நம்பியுள்ளனர்.

இயேசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதப்படும் Nativity தேவாலயத்தைப் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுப்பயணிகள் வருவர்.

போர் காரணமாகச் சுற்றுலாத் துறை முற்றிலுமாக முடங்கிப்போய்ப் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது.  

இப்போது சண்டைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சுற்றுப்பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் நகரம் மீண்டும் சீரடையும் என்பது பெத்லஹம் மக்களின் நம்பிக்கை. 

ஆதாரம்: AP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset