நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் செயிண்ட் ஜோசஃப் தேவாலயத்தில் சந்தேகப் பொருள்: பொதுமக்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை

சிங்கப்பூர்:

அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் (Upper Bukit Timah Road) உள்ள செயிண்ட் ஜோசஃப் தேவாலயத்தில் (St Joseph's Church) சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் ரசாயன, உயிரியல், கதிரியல், வெடிமருந்துத் தற்காப்புக் குழுமம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் காவல்துறை நடவடிக்கைகளுக்குக் குழுவினர் உதவிவருவதாக காவல்துறை சொன்னது.

தேவாலயத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாகக் காவல்துறை அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.

காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

பொதுமக்கள் அந்த இடத்தைத் தவிர்க்கும்படியும் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு இணங்கி நடக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

முன்னதாக இன்று காலை 7.10 மணி அளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியிருந்தது.

ஆதாரம்: மீடியா கோர்ப் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset