செய்திகள் உலகம்
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
டாக்கா:
வங்கதேசத்தில் முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவிற்கு தப்பி ஓடினார். மோடி அரசு அவருக்கு அடைக்கலம் தந்தது. இதை தொடர்ந்து, பொருளாதார நிபுணரான முஹம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
வங்கதேசத்தில் 2026 பிப்ரவரி 12-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டாக்கா-8 தொகுதி வேட்பாளராக ஷெரீப் உஸ்மான் ஹாடி (32) என்ற மாணவர் தலைவர் களமிறங்கினார். இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவரான இவர், கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தை வழிநடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவர்.
இந்நிலையில், டாக்காவில் கடந்த 12-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கிய இவரை, முகமூடி அணிந்த மர்ம நபர்கள், தலையில் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு டாக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முன்னேற்றம் இல்லாததால் கடந்த 13-ம் தேதி ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷெரீப் உஸ்மான் ஹாடி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்த தகவல் வெளியானதை அடுத்து, கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி டாக்கா உட்பட பல்வேறுபகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த படுகொலைக்கு பின்னணியில் இருப்பதாக இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக் கட்சி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் பொது மக்கள் கோஷம் எழுப்பினர்.
பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, அவர்களை தடுத்து நிறுத்தினர். அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான இடங்கள் மீதும் மாணவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் அமைச்சர் மிரட்டல்
February 24, 2026, 11:15 am
பனியை உடைத்து ஏரியில் மூழ்கிய சுற்றுலா பேருந்து: சீன சுற்றுலாப் பயணிகள் பலி
February 23, 2026, 7:38 pm
துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்
February 23, 2026, 12:48 pm
அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்
February 23, 2026, 11:33 am
‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 4:53 pm
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
February 22, 2026, 11:38 am
இயற்கை சீற்றத்தினால் அவதிப்படும் சீனா மக்கள்: சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 22, 2026, 10:24 am
