நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது

சிங்கப்பூர்:

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 6 இந்தோனேசியர்களைக் காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

அவர்கள் 23 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

தானா மேரா கடல்பகுதியில் அவர்கள்
மரப்படகில் பயணம் செய்ததைக் கடலோரக் காவல்படை கண்டது.

அவர்கள் வேலை தேடி சட்டவிரோதமாகச் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர் என்று அதிகாரிகள் கூறினர்.

பிடிபட்டவர்கள் மீது இன்று குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 6 மாதச் சிறைத்தண்டனையும் குறைந்தது 3 பிரம்படியும் விதிக்கப்படலாம்.

ஆதாரம்: மீடியா கோர்ப் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset