நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் பிற நாட்டு மக்கள் நுழைவதைக் தொடர்ந்து கடினமாக்கி வருகிறார்.

முன்பு, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதித்தது அமெரிக்கா.

புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய கடுமையான விதிமுறைகளை விதித்தது அமெரிக்க அரசு.

நேற்று மீண்டும் புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், சிரியா நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு முழுமையான தடை விதித்துள்ளது அமெரிக்கா அரசு.

மேலும், பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய பயண ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய இப்போது முழுமையான தடை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.

பாலஸ்தீனிய ஆணையம் என்று குறிப்பிட்டிருப்பது ஏன்?
பாலஸ்தீனை இன்னும் ஒரு நாடாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. இதனால், பாலஸ்தீனிய மக்களை பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீது அமெரிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பாலஸ்தீனிய மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தற்போது தடை விதித்திருக்கிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset